யாஷின் அடுத்த பட அப்டேட்...அவரே வெளியிட்ட தகவல்..ரசிகர்கள் மகிழ்ச்சி

திங்கள், 4 டிசம்பர் 2023 (19:19 IST)
பிரபல நடிகர் யாஷின் அடுத்த படம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.

கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் யாஷ். இவர்  நந்த கோகுல,  உத்தராயணம் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு மோகின மனசு என்ற திரைப்படம் மூலம் சினிமாவின் ஹீரோவானார்.

அதன்பின்னர். ராஜதானி, கிராடகா, ஜானு, நாடகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகரானார்.

பின்னர், கடந்த 2018 ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் ஹம்பாலா தயாரித்த கேஜிஎஃப் 1 படம் இந்தியாவில் வசூல் சாதனை படைத்து அனைத்து மொழி ரசிகர்களையும் கொண்டாட வைத்தது. இதேபோல் 2022ல் வெளியான கேஜிஎஃப் 2 படமும் பெரிய வெற்றி பெற்றது.

இந்த நிலையில், யாஷின் அடுத்த படம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் டிசம்பர் 8 ஆம் தேதி  காலை 9;55 மணிக்கு இவரது அடுத்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

It’s time… 8th December, 9:55 AM.
Stay tuned to @KvnProductions #Yash19 pic.twitter.com/stZYBspuxY

— Yash (@TheNameIsYash) December 4, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்