ரிஷப் ஷெட்டி நடிக்கும் ஜெய் ஹனுமான் படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

vinoth

வியாழன், 31 அக்டோபர் 2024 (09:23 IST)
இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் நடிகர் தேஜா சஜ்ஜாவின் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரான 'ஹனுமான்' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் ஈட்டியது. பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்சின் முதல் படம் இது. இந்த படம் 300 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்தது.

இந்த ஆண்டின் மெஹா பிளாக்பஸ்டர்களில் ஒன்றாக ஹனுமன் திரைப்படம் அதன்பின்னர் இந்த படம் ஓடிடியிலும் வெளியாகி அதிக பார்வையாளர்களால் பாரக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது இதன் இரண்டாம் பாகம் “ஜெய் ஹனுமான்” உருவாக உள்ளதாகவும், அதில் கதாநாயகனாக காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

பிரசாந்த் வர்மா தற்போது பாலகிருஷ்ணா மகன் மோக்‌ஷக்னா நடிக்கும் படத்தை இயக்கி வரும் நிலையில் அதை முடித்தவுடன் ஜெய் ஹனுமான் படத்தைத் தொடங்குவார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு ஜெய் ஹனுமான் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்