காந்தாரா சாப்டர் 1 வசூல் சாதனை! ராமேஸ்வரத்தில் தரிசனம் செய்த ரிஷப் ஷெட்டி!

Prasanth K

திங்கள், 20 அக்டோபர் 2025 (08:01 IST)

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா சாப்டர் 1’ பெரும் ஹிட் அடித்த நிலையில், ராமேஸ்வரத்தில் சாமி தரிசனம் செய்துள்ளார் ரிஷப் ஷெட்டி.

 

ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த ‘காந்தாரா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, ‘காந்தாரா சாப்டர் 1’ படம் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தையும் ரிஷப் ஷெட்டியே இயக்கி நடித்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான இந்த படம் பெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனையை படைத்து வருகிறது.

 

தற்போது வரை ரூ.717 கோடி வசூலை குவித்துள்ள இந்த படம் விரைவில் ஆயிரம் கோடி வசூலை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இந்நிலையில் படத்தின் வெற்றியை தொடர்ந்து ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு வந்த நடிகர் ரிஷப் ஷெட்டி அங்கு சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்