பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த துருவ் விக்ரம், அனுபமா! கலகலக்கும் தீபாவளி Celebration!

Prasanth K

திங்கள், 20 அக்டோபர் 2025 (11:52 IST)

பிக்பாஸ் வீட்டில் இன்று தீபாவளி கொண்டாட்டம் களைக்கட்டியுள்ள நிலையில் அதில் பைசன் குழுவினரும் இணைந்துள்ளனர்.

 

விஜய் டிவியில் பிக்பாஸ் தொடரின் 9வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வீட்டில் வாட்டர்மெலன் ஸ்டார் - வினோத் அடிக்கும் ரகளைகள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாக தொடங்கிவிட்டன.

 

இந்த வார வீட்டு தலயாக கனி அக்கா தேர்வாகியுள்ளார். ஆனால் முதல் நாளான இன்று தீபாவளி என்பதால் வழக்கமான டாஸ்க்குகள் ஒதுக்கப்பட்டு கொண்டாட்டம் நடந்து வருகிறது. இந்த கொண்டாட்டத்தில் பைசன் படக்குழுவில் இருந்து நடிகர் துருவ் விக்ரம், நடிகை அனுபமாவும் இணைந்துள்ளனர். இதன் ப்ரோமோ வெளியாகி வைரலாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்