பிரபாஸ் நடித்து வரும் ராதே ஷ்யாம் படத்தின் பட்ஜெட் எக்குதப்பாக எகிறியுள்ளதாம்.
சாஹோ படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் அடுத்த படம் ராதே ஷ்யாம்.. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ராதா கிருஷ்ணன் இயக்கி வருகிறார். இந்த பிரம்மாண்டமான படத்துக்கு இசையமைப்பாளராக ஏ ஆர் ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த படம் முழுக்க முழுக்க காதல் படம் என சொல்லப்பட்டது. ஆனாலும் பிரபாஸின் சம்பளம் எல்லாம் சேர்த்து மொத்தமாக 200 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டுள்ளது.
ஆனால் இப்போது பாதி படம் மட்டுமே முடிந்திருக்கும் நிலையில் படத்தின் மொத்த பட்ஜெட்டும் காலியாகிவிட்டதாம். அதனால் பிரபாஸ் இப்போது இந்த படத்தின் மீது அதிருப்தியில் உள்ளாராம். தேவை இல்லாமல் ஒரு காதல் படத்துக்கு மிகப்பெரிய அளவில் செலவு செய்து விட்டோமே என நினைக்கிறாராம். இந்த படத்தை மகாநடி இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.