நடிகர் தனுஷும் செல்வராகவனும் தமிழ் சினிமாவின் ஹிட் காம்போ. அவர்கள் இருவரும் கடைசியாக மயக்கம் என்ன படத்தில் இணைந்து பணியாற்றினர். அதன் பிறகு 8 ஆண்டுகளுக்குப் பிறகு தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் தனுஷ். இந்த 8 ஆண்டுகாலத்தில் செல்வராகவன் இயக்கிய எந்த படமும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது தனது கர்ணன் மற்றும் அத்ராங்கி ரே ஆகிய படங்களை முடித்துள்ள தனுஷ் மார்ச் மாதத்தில் செல்வராகவன் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. இதை தயாரிப்பு நிறுவனமான வி கிரியேஷன்ஸ் இன்று அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.