அண்ணனின் திருமணத்தில் ஆனந்த கண்ணீர் வடித்த பூஜா ஹெக்டே!

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2023 (11:46 IST)
நடிகை பூஜா ஹெக்டே தன் அண்ணனின் திருமண புகைப்படங்களை வெளியிட்டு நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
 
மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை பூஜா ஹெக்டே முதன்முதலில் திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்தது தமிழ் சினிமாவில் தான். 
மடல் அழகியான இவரை மிஷ்கின் கண்டெடுத்து அவர் இயக்கிய முகமூடி திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். 
ஆனால், அந்த படம் பிளாப் ஆனதால் தெலுங்கு சினிமாவில் கவனத்தை செலுத்தி அங்கு சூப்பர் ஹிட் நடிகையானார்.
 
இந்நிலையில் பூஜா ஹெக்டேவின் அண்ணனுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமண போட்டோக்களை வெளியிட்டுள்ள அவர். 
என் அண்ணன் தன் உயிரை காதலித்து திருமணம் செய்து கொண்டான்!  ஆனந்தக் கண்ணீருடன் அழுதிருக்கிறேன், குழந்தையைப் போல சிரித்திருக்கிறேன். 
அண்ணா, உங்கள் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் அடியெடுத்து வைக்கும் போது, நீங்கள் கட்டுப்பாடில்லாமல் நேசிப்பீர்கள், உங்கள் முழு மனதுடன் ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்துக்கொள்ளுங்கள். 
வாழ்வில் அமைதி மற்றும் புரிதலைக் காண்பீர்கள் என்று நம்புகிறேன். ஷிவானி அழகான பிரமிக்க வைக்கும் மணமகள். எங்கள் குடும்பத்திற்கு உங்களை வரவேற்கிறேன் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்