பொன்னியின் செல்வன் பட கேரள உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (19:24 IST)
பொன்னியின் செல்வன் படத்தின் கேரள விநியோக உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்.

கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இதையடுத்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் இதுவரை வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளன. சமீபத்தில், இப்படத்தின்  இரண்டாவது பாடலான சோழா சோழா பாடல் ஐதராபாத்தில் ரிலீஸ் ஆனது.

இந்நிலையில் இப்படத்தின் கேரள வி நியோக உரிமையை  கோகுலம் கோபாலன் வாங்கியுள்ளார். இதை லைகா நிறுவனம் தன் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் கேரள ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே, தெலுங்கில் வெளியிடும் உரிமையை தயாரிப்பாளர் தில் ராஜு கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்