த்ரிஷா அரசியலுக்கு வருவது உண்மையா? தாயார் விளக்கம்!

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (17:43 IST)
நடிகை த்ரிஷா அரசியலுக்கு வர இருப்பதாகவும் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து அவரது தாயார் உமா கிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். 
 
தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் த்ரிஷா அரசியலில் இணைய இருப்பதாக கூறப் படுவது முற்றிலும் பொய்யானது என்றும் காங்கிரஸ் உள்பட எந்த கட்சியிலும் அவர் இணைய வாய்ப்பே இல்லை என்றும் கூறினார் 
 
மேலும் தற்போது த்ரிஷா திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் அரசியலில் அவர் ஈடுபட மாட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற பொய்யான செய்திகள் எப்படி பரவுகிறது என்று எனக்கு தெரியவில்லை என்றும் அவர் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பினார். 
 
இதனை அடுத்து த்ரிஷா அரசியலுக்கு வருவதாக கூறப்பட்ட செய்தி முற்றிலும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்