மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், ஜெயரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் விக்ரமுக்கு குறைந்த அளவிலான சீன்கள் மட்டுமே இருப்பதாகவும், இதனால் டீசர் வெளியீட்டு விழாவில் சில காரணங்களால் கலந்து கொள்ளாமல் அவர் மணிரத்னம் மீது அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், முதலில் கதையைக் கேட்ட பின் தான் விக்ரம் இப்படத்தில் நடித்திருப்பார். அதனால், மணிரத்னத்தின் மீது விக்ரம் மனஸ்தாப்பட வேண்டியதிருக்காது என்றும் பொன்னியின் செல்வன் படத்தின் டீசரில் விக்ரம் போர்சன் அதிகமாக இருப்பதுபோன்றுள்ளதாக கூறப்பட்டது
இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா இன்று மாலை ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், நாளை மாலை 5 மணிக்கு, பொன்னியின் செல்வன் 1 படத்தின் டீசர் வெளியாகும் என ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்து, அதில், எங்கள் சோழா ஒரு புலி என்று சோழ குல இளவரசனாக நடித்துள்ள விக்ரமின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.