ரஜினி பிறந்த நாளன்று பேட்ட டீஸர்?

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (14:55 IST)
ரஜினி நடிப்பில் வேகமாக வளர்ந்து வரும் பேட்ட படத்தின் டீஸர் ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ந்தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சன்பிக்ஸர்ஸ் சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் படத் தயாரிப்பில் ஈடுபட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் 'பேட்ட'  படத்தைத் தயாரித்து வருகிறது. இப்படத்தின் முதன் முதலாக ரஜினி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

படத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், நவாஸுதின் சித்திக், பாபி சிம்ஹா, சசிக்குமார், குரு சோமசுந்தரம், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், மாளவிகா மோகணன், இயக்குனர் மகேந்திரன் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. பேட்டப் படத்தின் படப்பிடிப்பு தற்போது காசியில் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே பேட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கல் மற்றும் மோஷன் போஸ்டர் இரண்டும் வெளியாகி ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீஸர் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி வெளியாகும் என சினிமா வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரஜினி ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்