பழைய கதைகளைப் பேசியபடி இயக்குநர் மகேந்திரனுடன் அன்பு பாராட்டும் ரஜினி

திங்கள், 15 அக்டோபர் 2018 (10:41 IST)
தனக்கு மிகவும் பிடித்த நெருக்கமான இயக்குனரான  மகேந்திரனோடு மீண்டும் பணிபுரிந்து வருவதால், அவருடன் மிகவும் மகிழ்ச்சியுடன் அதிக நேரம் செலவழித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘பேட்ட’ . இந்த படத்தின் டப்பிடிப்பு வாராணசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது.. இதில் ரஜினி, த்ரிஷா, சசிகுமார், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறது படக்குழு.
 
இப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே ரஜினி - மகேந்திரன் இருவருமே நீண்ட நேரம் தங்களுடைய பழைய கதைகளைப் பேசியபடி இருந்திருக்கிறார்கள். 
 
ஒரு முறை இயக்குநர் பாலசந்தர் 'பிடித்த இயக்குநர் யார்’ என்று ரஜினியிடம் கேட்ட போது, கொஞ்சம் கூட தாமதிக்காமல் ரஜினி சொன்ன பெயர் ‘இயக்குநர் மகேந்திரன்’ என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்