சர்வதேச படவிழாவில் பங்கேற்ற பரியேறும் பெருமாள்

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2018 (19:39 IST)
ஒடுக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த குரலை, ஒலிப்பெருக்கி வைத்து ஒலிக்க செய்த பரியேறும் பெருமாள் திரைப்படம் சர்வதேச விழாவில் பங்கேற்கவுள்ளது.
 
இயக்குநர்கள் ராம் மற்றும் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த மாரி செல்வராஜ் இந்தத் திரைப்படத்தை இயக்கினார். பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் மூலம் இதனை தயாரித்திருந்தார். கதிர், ஆனந்தி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
 
பல பிரபலங்களின் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் பெற்ற பரியேறும் பெருமாள் ஒரு மாதத்தைக் கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் தமிழகம் தவிர்த்து, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும் திரையிடப்பட்டு அங்குள்ள ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
 
இந்நிலையில், இந்தத் திரைப்படம், கோவாவில் நடைபெறும் 49-வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் தகவலை பரியேறும் பெருமாளின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் அவரது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்