திருக்குறள் குறித்து பிரதமர் மோடி பதிவு செய்த டுவிட்டுக்கள்: தமிழர்கள் பெருமிதம்

வெள்ளி, 17 ஜூலை 2020 (07:11 IST)
கடந்த சில நாட்களுக்கு முன் லடாக் சென்ற பிரதமர் மோடி, ராணுவ வீரர்களிடையே பேசியபோது திருக்குறளை கூறினார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர் தனது அதிகாரபூர்வ டுவிட்டரில் திருக்குறள் குறித்து இரண்டு டுவீட்டுக்களை பதிவு செய்துள்ளார்.
 
ஒரு டுவீட்டில் திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும்  கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும் என்றும் இன்னொரு டுவிட்டில் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள  இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன் என்றும் குறிப்ப்பிட்டுள்ளார். இரண்டையும் அவர் தமிழில் டுவிட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழில் டுவிட் செய்த இதே கருத்தை அவர் ஆங்கிலத்திலும் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும். pic.twitter.com/TzNBrwrdoi

— Narendra Modi (@narendramodi) July 16, 2020

தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன்.

— Narendra Modi (@narendramodi) July 16, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்