உடைகிறதா பா ரஞ்சித் & சந்தோஷ் நாராயணன் கூட்டணி!

Webdunia
சனி, 28 ஆகஸ்ட் 2021 (16:11 IST)
தமிழ் சினிமாவில் ஒரு புத்துணர்ச்சிக் கூட்டணியாக அமைந்தவர்கள் இயக்குனர் பா ரஞ்சித்தும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும்.

அட்டக்கத்தி படம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படமாக வைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் தலித் அரசியல் உரையாடலை பேசி இப்போது வரை அதை முன்னெடுத்து செல்லும் பா ரஞ்சித்தின் முதல் படம். இந்த படத்தில்தான் சந்தோஷ் நாராயணனும் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். அதிலிருந்து அவர்களின் கூட்டணி தொடர்ந்து வருகிறது.

ஆனால் சமீபத்தில் சந்தோஷ் நாராயணன் மற்றும் பா ரஞ்சித் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகவும், அதனால் இருவரும் பிரிய உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த பிரச்சனைக்கு சமிபத்தில் எழுந்த தெருக்குரல் அறிவு, ஷான் டி வின்சண்ட் பால் மற்றும் தீ சம்மந்தப்பட்ட பிரச்சனையேக் காரணம் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்