தெலுங்கு நடிகர் சங்க தலைவர் மீது ஶ்ரீரெட்டி மோசடி புகார்!

Webdunia
வியாழன், 6 செப்டம்பர் 2018 (10:51 IST)
தனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர நடிகை ஶ்ரீ ரெட்டி.  இப்போது அவர் தெலுங்கு நடிகர் சங்க தலைவர் சிவாஜிராஜா மீது மோசடி புகார்களை வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அவர்  கூறியிருப்பதாவது:
"எனக்கு நேர்ந்த பாலியல் அவலங்களை சொல்லி, தெலுங்கு நடிகர் சங்கத்தின் கதவை தட்டினேன். ஆனால் தெலுங்கு நடிகர் சங்க தலைவர் சிவாஜிராஜா புரோக்கர் போல் செயல்படுகிறார். அவர் எனது பிரச்சினையை கண்டுகொள்ளவில்லை. விளம்பரத்துக்காக நான் பாலியல் புகார் எழுப்பி வருவதாக கேவலமாக  பேசினார். எனது பாவம் அவரை சும்மா விடாது. 
 
பாலியல் புகாரில் சிக்கிய நடிகர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். இதற்காக பல கோடிகள் எனக்கு தருவதாகவும் பேரம் பேசினார். அந்த  பணத்தை நான் வாங்கவில்லை. வயதான தனது தந்தை, தாயையே சிவாஜிராஜா கவனிக்கவில்லை. வயதான நடிகர்களுக்கு முதியோர் இல்லம் கட்டுவதாக  பணம் வசூலித்து மோசடி செய்தது வெட்கக்கேடு.
 
இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்