வி.ஜி.என் நிறுவனத்தின் ரூ.115 கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறையினர் அதிரடி
சனி, 17 பிப்ரவரி 2018 (16:28 IST)
சட்டவிரோத பணிவர்த்தனை புகாரின் பேரில் விஜிஎன் நிறுவனத்தின் சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வி.ஜி.என் ரியல் எஸ்டேட் நிறுவனம் பல அடுக்கு மாடி கட்டிடங்களை கட்டி வருகிறது. இந்நிலையில், இந்த நிறுவனம் எஸ்.பி.ஐ வங்கியில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக எழுந்த புகார் எழுந்தது.
இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள வி.ஜி.என் டெவலப்பர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.115 கோடி சொத்துக்களை இன்று அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.
இந்த விவகாரம், அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.