ஜனவரி 22ஆம் தேதி பாவனா திருமணம்

Webdunia
வியாழன், 18 ஜனவரி 2018 (14:34 IST)
ஜனவரி மாதம் 22ஆம் தேதி நடிகை பாவனாவுக்குத் திருமணம் நடைபெற இருக்கிறது.
கேரளாவைச் சேர்ந்த பாவனா, மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் என 4 தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்காக கேரள அரசின் விருதை இரண்டு முறை பெற்றுள்ள பாவனாவுக்கும், கன்னட தயாரிப்பாளர் நவீனுக்கும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கடந்த ஆண்டே நடைபெறுவதாக இருந்த இவர்களது திருமணம், பாவனா வாழ்க்கையில் நடந்த விரும்பத்தகாத சம்பவத்தால் தள்ளி வைக்கப்பட்டது.
 
இந்நிலையில், வருகிற 22ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. திருச்சூரில் உள்ள ஜவஹர்லால் கன்வென்ஷன் செண்டரில் இந்தத்  திருமணம் நடைபெற இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்