பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத், தமிழில் ‘தாம் தூம்’ படத்தில் நடித்துள்ளார். ‘பாகுபலி’ கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத் கதையில், கிரிஷ் இயக்கத்தில் தற்போது ‘மணிகர்னிகா - த குயின் ஆப் ஜான்சி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இவரிடம் திருமணம் குறித்து கேட்கப்பட்டபோது, “30 வயதிலேயே பெண்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று ஏன் இந்த சமூகம் நினைக்கிறது எனப் புரியவில்லை. இது துரதிருஷ்டவசமானது. நான் 30 வயதில் எல்லாம் கல்யாணம் பண்ணிக்கொள்ள மாட்டேன். எனக்கு 30 வயதும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.