அனிருத்தை டென்ஷனாக்கிய விக்னேஷ் சிவன்...

Webdunia
வியாழன், 18 ஜனவரி 2018 (13:56 IST)
விக்னேஷ் சிவன் சொன்னதைக் கேட்டு அனிருத் டென்ஷனாக, அவரை கூல் செய்திருக்கிறார் விக்னேஷ் சிவன். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீஸான படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. 
 
சூர்யா ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில், ஆர்.ஜே.பாலாஜி, சத்யன், நந்தா ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
 
இந்தப் படத்தின் கதையை அனிருத்திடம் சொன்னபோது, ஹிந்தியில் அக்‌ஷய் குமார் நடித்து வெளியான ‘ஸ்பெஷல் 26’ படத்தின் ரீமேக்தான் இது என்று சொல்லியிருக்கிறார் விக்னேஷ் சிவன். அதைக்கேட்டு அனிருத் டென்ஷனாகி விட்டாராம். 
 
காரணம், ‘ஸ்பெஷல் 26’ படத்தில் பாடல்களே கிடையாது. ‘கவலைப்படாதீங்க பிரதர், தமிழில் பாடல்களுக்கான சூழ்நிலைகள் இருக்கின்றன’ என்று சொல்லி அவரைக் கூல் செய்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்