அரசே விழித்தெழு, அல்லேல் விலகிவிடு – கமலஹாசன் டுவீட்

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (15:13 IST)
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்  அரசே வித்திடு இல்லையேல் விலகிடு எனப் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர்  பதிவிட்டுள்ளதாவது :

சமீபத்திய ஆய்வுகள் வேலையிழப்பும்,வருமான இழப்பும் உச்சம் தொட்டு விட்டதென்கிறது. விலை உயர்வு,தொழில் பாதிப்பு,குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு இவையனைத்தும் வரப்போகும் பஞ்சத்திற்கான கட்டியம் கூறலே. தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பமும் இதை உணரத்துவங்கிவிட்டது.

அரசே விழித்தெழு,அல்லேல் விலகிவிடு எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்