பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஐபோன், ஐபேட் ஆகியவற்றை வாங்கி தருவதை காட்டிலும் தோல்வியை சந்திக்கும் பக்குவத்தை கற்றுத்தர வேண்டும் என்று தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் வெற்றி விழாவில் நடிகர் கார்த்தி பேசியுள்ளார்.
ஓடாத பல படங்களின் குழுவினர்களே சக்சஸ் மீட் என்ற பெயரில் போலியான வெற்றியை கொண்டாடி வரும் நிலையில் உண்மையாகவே பெரும் வரவேற்பை பெற்ற 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் வெற்றிவிழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் கார்த்தி பேசியதாவது:
தோல்விகளையும், அவமானங்ககளையும் தாண்டி வரும் போது தான் நாம் ஒரு செயலில் முழுமை அடைகிறோம். இதை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். ஒரு செயலில் தோல்வி அடைந்தால் குழந்தைகள் சோர்ந்து போகின்றனர். தோல்வி வாழ்வின் ஒரு அங்கம் அதை நீங்கள் சந்தித்தே தீரவேண்டும் என்று சொல்லி வளர்க்க வேண்டும் அப்போது தான் அவர்கள் ஒரு செயலில் உறுதியாக இருப்பார்கள். வளர வேண்டும் என்றால் தோல்விகளை தாண்டி தான் வரவேண்டும் என்று பெற்றவர்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும்.
தேர்வு சமயங்களில் பெற்றோர்கள் குழந்தைகள் மீது திணிக்கும் அழுத்தத்தை குறைக்க வேண்டும். எங்க அப்பா என்னிடம் மார்க் பற்றி கேட்டதே இல்ல. நீ நல்லா படிச்சா நீ நல்லா இருப்ப அவ்ளோதான் என்று கூறுவார். பயத்துலேயே நானே படிப்பேன். எனக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதனால் அந்த சிந்தனை அடிகடி எனக்குள் வருகிறது எத்தனையோ குழந்தைகள் வழிகாட்டுதல் இல்லாமல் இருக்கின்றது. சில பெற்றோர்கள் பொறுமை இழந்து குழந்தைகளை அடிகிறார்கள் குழந்தைகளை அடிக்க வேண்டாம். சம்பாதிப்பதை விட குழந்தைகளை வளர்ப்பது ரொம்ப முக்கியம். குழந்தைகளுக்காக நேரத்தை ஒதுக்குங்கள்.