போதைப் பொருள் வழக்கு… நடிகர்கள் ஸ்ரீகாந்த் & கிருஷ்ணாவின் ஜாமீன் மனு.. இன்று தீர்ப்பு!

vinoth

செவ்வாய், 8 ஜூலை 2025 (08:28 IST)
போதை பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் சமீபத்து கைது செய்யப்பட்டது தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஸ்ரீகாந்த் கொக்கைன் எனும் போதை பொருளை வாங்கி பயன்படுத்தியது தெரியவர விசாரணைத் தொடங்கியது.

ஸ்ரீகாந்த் மூலமாக கிருஷ்ணாவும் போதைப் பொருளைப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. அவர் கேரளாவில் தலைமறைவாக அவரை தனிப்படை போலீஸார் தேடிக் கண்டுபிடித்து கைது செய்தனர். நீதிமன்ற விசாரணையின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் இருவரும் ஜாமீன் கேட்டு போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தனர்.

கடந்த மூன்றாம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்து அவர்களின் ஜாமீனை நிராகரித்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அவர்கள் இருவரின் ஜாமீன் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்