அன்பு செழியனை திட்டி போட்ட டிவிட்டை நீக்கிய பூர்ணா -காரணம் என்ன?

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2017 (13:50 IST)
சினிமா ஃபைனான்சியர் அன்பு செழியனை கெட்ட வார்த்தையில் திட்டியது பற்றி நடிகை பூர்ணா விளக்கம் அளித்துள்ளார்.


 

நடிகை பூர்ணா முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, சென்னையில் ஒரு நாள் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சசிகுமாருக்கு ஜோடியாக கொடிவீரன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
 
அசோக்குமார் தற்கொலை சம்பவம் சினிமா வட்டாரத்தில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த பூர்ணா, அன்புசெழியனை மிகவும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கூறியதோடு, அவரை நாச்சரியார் டீசரில் ஜோதிகா பேசும் கெட்டவார்த்தையை பயன்படுத்தி அவரை திட்டியிருந்தார்.


 

அதுபற்றி பலரும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், அதற்கு விளக்கம் அளித்துள்ள பூர்ணா “ கொடிவீரன் படத்தில் நடித்த போது அசோக்குமாரை எனக்கு தெரியும். அவர் மிகவும் பண்பான மனிதர். அவரின் மரணம் எனக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள சென்றபோது, அவரது குடும்பத்தினரை பார்த்ததும் உடைந்து விட்டேன். அதனால்தான், அன்பு செழியனை அப்படி திட்டினேன். அது என் கோபத்தின் வெளிப்பாடு. இதைவைத்து சர்ச்சைகளை கிளப்ப வேண்டாம்” என அவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும், அன்புவை திட்டி அவர் போட்ட டிவிட்டையும் அவர் தனது டிவிட்டர் பக்கத்திலிருந்து நீக்கி விட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்