நயன்தாராவுடன் ஜோடி சேரும் நிவின் பாலி!

Webdunia
திங்கள், 10 ஜூலை 2017 (17:57 IST)
தயான் ஸ்ரீனிவாசன் இயக்கவிருக்கும் புது படத்தில் நிவின் பாலியுடன் முதன் முறையாக நயன்தாரா ஜோடி சேர்ந்து  நடிக்கவிருக்கிறார்.

 
மலையாள பிரபலம் இயக்குனர் ஸ்ரீனிவாசன், சகோதரர் வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் திரைத்துறையில் உள்ளனர். தற்போது தயான் ஸ்ரீனிவாசன் இயக்குநராக அறிமுகமாகவிருக்கிரார். இந்த படம் அவர் தந்தை இயக்கிய ‘வடக்குநோக்கியந்தரம்’ என்ற வெற்றி படத்தின் தற்கால அம்சங்கள் நிறைந்து காணப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் வெற்றியையடுத்து, தமிழில் நிவின் பாலி நடிக்கும் நேரடி தமிழ் படமான 'ரிச்சி' படத்தில் அறிமுகமானார். தற்போது தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவுடன் முதம்முதலில் ஜோடி சேர்ந்து  நடிக்கவிருக்கிறார். ரசிகர்களின் மனதை கவர்ந்த இருவரும் திரையில் ஒன்றாக இணைவது ரசிகர்களுக்கு படம் குறித்த கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் த்ரிஷாவுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் உறுதி செய்யாத தகவல்கள்  கூறுகின்றன.
அடுத்த கட்டுரையில்