இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ரெட்ரோ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் படம் சென்சாருக்கு அனுப்பப்பட்ட நிலையில் பல இடங்களில் மாற்றங்கள் சொல்லியுள்ளது சென்சார் போர்ட். மொத்தம் 8 இடங்களில் வசனங்களை நீக்குதல், குரூரமான விஷ்வல்களை மங்கச் செய்தல் என மாற்றங்கள் சொல்லியுள்ளது. படம் மொத்தம் 2 மணிநேரம் 48 நிமிடங்கள் ஓடும் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.