உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ பாடல்கள், டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (20:18 IST)
உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் நாளை மாலை ஆறு முப்பது மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஏற்கனவே இந்த படம் சென்சார் செய்யப்பட்டு ‘யூஏ’ சான்றிதழ் பெற்று உள்ள நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
போனிகபூர் தயாரித்துள்ள இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி உள்ளார் என்பதும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 உதயநிதி, ஆரி, தன்யா ரவிச்சந்திரன். சிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி உள்பட பலர் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசையில், தினேஷ்குமார் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்