விக்ரம் படத்தில் சர்ப்ரைஸாக அமையப்போகும் 5 நிமிடக் காட்சி…கமல் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்!

வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (15:40 IST)
விக்ரம் படத்தில் கமல் இளமையாக தோன்றும் காட்சிகள் சர்ப்ரைஸாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. விக்ரம் திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய உள்ளது. இந்நிலையில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள கமல், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய மூவரின் கதாபாத்திரங்களைப் பற்றிய அறிமுகமாக ஒரு புதிய வீடியோவை இணையத்தில் வெளியிட, அது இப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் படத்தில் இடம்பெறும் பிளாஷ்பேக் காட்சிகளில் கமல்ஹாசன் நடித்த பழைய விக்ரம் படத்தின் தோற்றத்தில் தோன்ற உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக ஐரிஷ்மேன் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்பட்ட டி ஏஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்ளார்களாம். இந்த காட்சிகள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் டிரீட்டாக அமையும் என சொல்லப்படுகிறது. இந்த காட்சிகள் படத்தில் 5 நிமிடம் இடம்பெறும் என சொலல்ப்படுகிறது. இந்தக் காட்சிகள் கமல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமையும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்