திடீரென வைரலாகும் நயன்தாராவின் டாட்டூ புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2020 (10:49 IST)
நடிகை நயன்தாரா முதுகில் டாட்டூ குத்திக் கொள்வது போன்ற புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக பல வருடங்களாக நீடித்து வருகிறார். அவரின் படங்கள் தமிழில் பல கோடி ரூபாய் வரை வசுலித்து வருவதால் தமிழில் கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வருகிறார். இதனால் அவர் சம்மந்தப்பட்ட செய்திகள் மிகவும் அதிக கவனத்தைப் பெறுகின்றன.

இந்நிலையில் இப்போது இணையத்தில் அவர் முதுகில் டாட்டூ குத்திக் கொள்ளும் புகைப்படம் ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. ஆனால் அந்த புகைப்படம் 13 ஆண்டுகளுக்கு முன்னால் பில்லாபடத்தில் அவர் நடித்த போது அந்த படத்துக்காக குத்தப்பட்ட தற்காலிக டாட்டூ என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்