பிரபு தேவாவிற்காக ஒரு வருடம் காத்திருந்த நயன்தாரா - அந்த சோக கதையை கொஞ்சம் கேளுங்க!

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (15:49 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா மார்க்கெட் நடிப்பில் உச்சத்தை தொட்ட தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளையும் அதற்கு ஈடாக சந்தித்துள்ளார். குறிப்பாக அவரது முக்கோண காதல் ஊரறிந்த உண்மை. நயனின் முதல் காதலரான சிம்புவுடன் நெருக்கமாக இருந்த லிப்லாக் புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதையடுத்து அந்த காதல் பிரேக்அப் ஆகிவிட பின்னர் விஜய்யுடன் வில்லு படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குனரான பிரபுதேவாவை காதலிக்க துவங்கினார். பிரபு தேவாவின் மனைவி இதை ஊர் முழுக்க அம்பலப்படுத்தி நயன்தாரவை அசிங்கப்படுத்தியதால் அந்த காதலையும் முறித்துக்கொண்டார் நயன். இந்நிலையில் பிரபு தேவாவை காதலித்துக்கொண்டிருந்த போது தான் எந்த படங்களிலும் நடிக்காமல் சினிமாவை விட்டே ஒதுங்கியிருந்தார் நயன்.

அதற்கு காரணம், நயன் பிரபு தேவாவை திருமணம் செய்துக்கொள்ள திட்டமிட்டு அதற்காக ஒருவருடம் காத்திருந்தாராம். ஆனால், அவருக்கு நடந்ததோ வேறு... இதனால் மனமுடைந்து போன நயன் எல்லாத்தையும் தூக்கி எறிந்துவிட்டு சினிமாவில் புது அவதாரமெடுத்து தொடர் வெற்றிகளை குவித்து இன்று லேடி சூப்பர் ஸ்டாராக வளர்ந்து நிற்கிறார். தற்போது விக்னேஷ் சிவனுடன் தீவிர காதலில் இருந்து வரும் நயன் அவரை விரைவில் திருமணம் செய்யப்போவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்