விமானத்தில் வரவழைக்கப்படும் மேக்கப் மேன்கள் – நயன்தாராவை விமர்சித்த தயாரிப்பாளர்!

Webdunia
சனி, 23 ஜனவரி 2021 (09:39 IST)
நடிகை நயன்தாரா தனது மேக்கப் மற்றும் சிகையலங்காரம் ஆகியவற்றுக்காக மும்பையில் இருந்து 6 மேக்கப் மேன்களை வரவழைப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் அளவுக்கு மார்க்கெட் வேல்யு உள்ள நடிகையாக நயன்தாரா இருக்கிறார். அவர் நடிக்கும் படங்களின் வெற்றிக்கு அவரும் ஒரு முக்கியக் காரணியாக பார்க்கப்படுகிறார். இந்நிலையில் நயன்தாரா மற்றும் ஆண்ட்ரியா உள்ளிட்ட நடிகைகள் மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைலுக்காக மும்பையில் இருந்து விமானத்தில் 6 பேர் கொண்ட குழுவை வரவழைத்து தயாரிப்பாளர்களுக்கு செலவை ஏற்றிவிடுவதாக முன்னால் தயாரிப்பாளர் கே ராஜன் தெரிவித்துள்ளார்.

ஒரு திரைப்பட விழாவில் பேசிய அவர் ‘ஏன் இங்கெல்லாம் மேக்கப் போட ஆட்களே இல்லையா?’ என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்