ஷ்ரத்தா ஸ்ரீநாத் கேரக்டரில் நடிக்கும் நயன்தாரா

Webdunia
சனி, 9 டிசம்பர் 2017 (20:21 IST)
கன்னடத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த கேரக்டரில், தமிழில் நயன்தாரா நடிக்க இருக்கிறார்.
 
நயன்தாரா நடிப்பில் வெளியாகி சமீபத்தில் பாராட்டுகளைப் பெற்ற படம் ‘அறம்’. அடுத்து சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த ‘வேலைக்காரன்’ ரிலீஸாக இருக்கிறது. அதன்பிறகு ‘இமைக்கா நொடிகள்’, ‘கொலையுதிர் காலம்’, ‘கோலமாவு கோகிலா’ என பல படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார் நயன்தாரா.
 
இந்நிலையில், ‘சைத்தான்’ மற்றும் ‘சத்யா’ படங்களை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படம், கன்னடத்தில் வெளியாகி ஹிட்டான ‘யு டர்ன்’ என்ற படத்தின் ரீமேக்.
 
இந்தப் படத்தில், ‘விக்ரம் வேதா’ மற்றும் ‘ரிச்சி’ படங்களில் நடித்துள்ள ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஹீரோயினாக நடித்திருந்தார். அவர் நடித்த ரிப்போர்ட்டர் வேடத்தில் தமிழில் நடிக்கிறார் நயன்தாரா. ஏற்கெனவே ‘தலைமகன்’ படத்தில் ரிப்போர்ட்டராக நடித்தவர் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்