ராஷ்மிகா & விஜய் தேவரகொண்டாவிடம் மன்னிப்பு கேட்ட நானி!

Webdunia
புதன், 6 டிசம்பர் 2023 (09:34 IST)
தசரா படத்தின் வெற்றியை அடுத்து நானி அடுத்து நடிக்கும் படத்துக்கு “ஹாய் நானா” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் டிசம்பர் 7 ஆம் தேதி தென்னிந்திய மொழிகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் சௌரவ் இயக்கியுள்ளார். ஹெஷாம் அப்துல் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருனாள் தாக்கூர் நடிக்கிறார்.  ஒரு முக்கிய வேடத்தில் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். கணவன் மனைவி மற்றும் குழந்தையை மையமாகக் கொண்ட ஒரு கதைக்களமாக இந்த படம் இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் பீல்குட் டிரைலர் இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் நடிகர் நானி உள்ளிட்ட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இருக்கும் பர்ஸனல் புகைப்படங்களை வைத்திருந்தனர். இது இப்போது சமூகவலைதளங்களில் நானி படக்குழுவுக்கு கண்டனங்கள் எழுந்தன.

இதையடுத்து இப்போது நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். சம்மந்தப்பட்ட அந்த புகைப்படங்கள் வைக்கப்பட்டது குறித்து தனக்கு முன்னரே தெரியாது என்றும், இதனால் யார் மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்