நானியின் ‘ஹாய் நான்னா’ திரைப்படத்தில் இணைந்த துருவ் விக்ரம்!

செவ்வாய், 28 நவம்பர் 2023 (07:19 IST)
தசரா படத்தின் வெற்றியை அடுத்து நானி அடுத்து நடிக்கும் படத்துக்கு “ஹாய் நானா” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் டிசம்பர் 7 ஆம் தேதி தென்னிந்திய மொழிகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் சௌரவ் இயக்கியுள்ளார். ஹெஷாம் அப்துல் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருனாள் தாக்கூர் நடிக்கிறார்.  ஒரு முக்கிய வேடத்தில் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். கணவன் மனைவி மற்றும் குழந்தையை மையமாகக் கொண்ட ஒரு கதைக்களமாக இந்த படம் இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் பீல்குட் டிரைலர் இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள odiyamma என்ற பாடலை ஸ்ருதிஹாசனோடு இணைந்து நடிகர் துருவ் விக்ரம் பாடியுள்ளார். பார்ட்டி பாடலான இந்த பாட்டின் மேக்கிங் வீடியோவை படக்குழு சமீபத்தில் இணையத்தில் வெளியிட அந்த வீடியோ கவனம் பெற்று வருகிறது.

Party begins tomorrow

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்