”நயன்தாராவோட பெஸ்ட் இதுவாதான் இருக்கும்”… புகழ்ந்து தள்ளிய சமந்தா!

திங்கள், 18 ஏப்ரல் 2022 (10:45 IST)
நயன்தாராவும் சமந்தாவும் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் இணைந்து  இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படம் தொடங்கியதில் இருந்தே சமந்தா நயன்தாராவோடு மிகவும் நெருக்கமான நட்பைப் பேணி வருகிறார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடந்த ஒரு உரையாடலின் போது அவரிடம் ரசிகர் ஒருவர் நயன்தாரா பற்றி சொல்லுங்கள் எனக் கேட்க “அவர் ஒரு தனித்துவமான நடிகர். அவரின் இதுவரையிலான சிறந்த நடிப்பாக காத்து வாக்குல ரெண்டு காதல் இருக்கும். “ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்