இரண்டாம் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாரா நாக சைதன்யா?
திங்கள், 18 ஏப்ரல் 2022 (17:57 IST)
இரண்டாம் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாரா நாக சைதன்யா?
நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
தெலுங்கு நட்சத்திரங்களான நாகார்ஜுனா-அமலா மகன் நாக சைதன்யா 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தா அவரை திருமணம் செய்து கொண்டார்
இந்தத் ஜோடி கடந்த 5 ஆண்டுகளாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்த நிலையில் திடீரென கடந்த ஆண்டு பிரிந்து விட்டது
இந்த நிலையில் தற்போது நாகசைதன்யாவின் பெற்றோர்கள் உறவினர் பெண் ஒருவரை நாக சைதன்யாவுக்கு திருமணம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
ஆனால் அதே நேரத்தில் சமந்தா திரைப் படங்களில் பிசியாக இருப்பதால் இப்போதைக்கு மறுமணம் இல்லை என்று தெரிகிறது