சமந்தா அனைத்து மகிழ்ச்சிகளுக்கும் பொருத்தமானவர்… மேடையில் பேசிய நாக சைதன்யா!

Webdunia
ஞாயிறு, 7 மே 2023 (09:53 IST)
நடிகை சமந்தா கடந்த நாக சைதன்யாவை விவாகரத்து செய்ததை அடுத்து  அந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. விவாகரத்துக்குப் பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரிலீஸானது. அடுத்து குஷி மற்றும் சகுந்தலம் ஆகிய படங்கள் வரிசையாக ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. அதே போல நாக சைதன்யாவும் அடுத்தடுத்து தனது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

விவாகரத்து குறித்து பேசிய சைதன்யா “நாங்கள் இருவருமே அந்த கட்டத்தில் இருந்து அடுத்ததை நோக்கி நகர்ந்துவிட்டோம். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை தலைப்பு செய்தியாவதை நான் விரும்பவில்லை. ஆனால் எனது தொழிலில் அதுவும் ஒரு பகுதியாக உள்ளது. நாங்கள் விவாகரத்து பற்றி சொல்ல வேண்டியதை ஏற்கனவே சொல்லிவிட்டோம்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் அவர் நடிப்பில் அடுத்து ரிலீஸ் ஆக உள்ள கஸ்டடி படத்தின் ப்ரமோஷனுக்காக சென்னை வந்த அவர் சமந்தாவை பற்றி நேர்மறையாக பேசியுள்ளார். அவரது பேச்சில் “நாங்கள் பிரிந்து 2 வருடம் ஆகிவிட்டது. விவாகரத்து பெற்று ஒரு வருடம் ஆகிவிட்டது.  எங்கள் கடந்த கால வாழ்க்கை மீது எனக்கு மரியாதை உண்டு. சமந்தா அனைத்து மகிழ்ச்சிகளுக்கும் தகுதியான இனிமையானவர்.” என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்