பிரபல ஓடிடியில் தனுஷின் நானே வருவேன்… தேதி இதுதான்!

சனி, 22 அக்டோபர் 2022 (14:48 IST)
நடிகர் தனுஷ் நடிப்பில் செப்டம்பர் மாதம் வெளியான நானே வருவேன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான நானே வருவேன் கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி ரிலீஸ் ஆனது . இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் படத்தின் கதையை தனுஷே எழுதியுள்ளார். தற்போது நடிகராகி விட்ட செல்வராகவன் இந்த படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் ரிலீஸ் காரணமாக படத்துக்கு மிகப்பெரிய வசூல் இல்லை. ஆனால் பட தயாரிப்பாளர் தாணு படம் சூப்பர் ஹிட் என விளம்பரப் படுத்தினார். இந்நிலையில் இப்போது படம் திரையரங்குகளை விட்டு தூக்கப்பட்டு விட்ட நிலையில் அமேசான் ப்ரைம் தளத்தில் அக்டோபர் 27 ஆம் தேதி முதல் ரிலீஸ் ஆக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்