விஜய் சேதுபதி படத்தின் டீசரை வெளியிடும் தனுஷ்!

புதன், 19 அக்டோபர் 2022 (19:37 IST)
விஜய் சேதுபதியின் அடுத்த திரைப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
விஜய்சேதுபதி, சந்தீப் கிஷன், கவுதம் மேனன், வரலட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’மைக்கேல்’
 
இந்த படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் டீஸர் நாளை மாலை 05.31 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் டீசரை தனுஷ், ஹிந்தி டீசரை ராஜ் & டிகே, மலையாளத்தில் துல்கர் சல்மான், கன்னட டீசரை ரக்சித் ஷெட்டி, தெலுங்கு டீசரை ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்