நாச்சியார்- டுவிட்டர் விமர்சனம்

Webdunia
வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (13:24 IST)
இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜோதிகா மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நாச்சியார்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

 
இந்த படத்தில் ஜோதிகா மற்றும் ஜிவி பிரகாஷ் இருவரும் மாறுப்பட்ட வேடத்தில் நடித்துள்ளனர். எற்கனவே படத்தின் டீஸர் நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
 
சமூக வலைதளமான ட்விட்டரில் இப்படம் குறித்து நெட்டிசன்கள் பதிவிட்ட கருத்துகளை பார்க்கலாம்.
 
வேகமான திரைக்கதை...
 
பாலா தனது அழுத்தமான கதையை, வேகமான திரைக்கதை மூலம் அழகாக பதிவு செய்து இருக்கிறார். கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும், கதைக்கும் உயிர் கொடுத்து உள்ளார்கள்.
 
ஜி.வி.பிரகாஷ் நடிப்பு சூப்பர்...
 
இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் அருமையாக நடித்துள்ளார். குறிப்பாக காதல் காட்சிகளில் அவர் பேசும் ’நீங்க லவர்னு’சொல்லும் வசனம் சூப்பர்.

 
ஜோதிகாவா இது நம்ப முடியவில்லை?
 
ஜோதிகாவின் நடிப்பு மற்ற படங்களில் இருந்து நாச்சியார் படத்தில் முற்றிலும் மாறுபட்டுள்ளது.
 
இளையராஜவின் பின்னணி இசை கதைக்கு கச்சிதம்...
 
படத்திற்கு உயிரோட்டமாக அமைந்துள்ளது இளையராஜாவின் பின்னணி இசை.
 
இதுபோன்ற சாதகமான விமர்சனங்களை நெட்டிசன்கள் டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
 
மொத்தத்தில் இப்படத்திற்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே, இப்படம் ஒரு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்