பாலாவின் ’வணங்கான்’ ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளரின் முக்கிய அறிவிப்பு!

Mahendran

சனி, 1 ஜூன் 2024 (12:13 IST)
இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வந்த ’வணங்கான்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தகவலை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலை தளத்தில் அறிவித்துள்ளார்.

’வணங்கான்’ திரைப்படம் ஜூலை வெளியீடு என்று சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளதையடுத்து விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 12ஆம் தேதி கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ படம் வெளியாக இருக்கும் நிலையில் அதன் பிறகு ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் கழித்து ’வணங்கான்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’வணங்கான்’ திரைப்படத்தில் முதலில் சூர்யா நடிக்க இருந்த நிலையில் அதன் பின்னர் அவர் அந்த படத்தில் இருந்து விலகியதை அடுத்து அருண் விஜய் இந்த படத்தில் நடித்து வந்தார். மேலும் இந்த படத்தில் ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் குருதேவ் ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி மற்றும் பாலா இணைந்து தயாரித்துள்ளனர்.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்