நயன்தாராவை ஓரங்கட்டிய ஓவியா - எப்படி தெரியுமா?

Webdunia
வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (12:47 IST)
சென்னை டைம்ஸ் பத்திரிக்கை நடத்திய கருத்துக்கணிப்பில் 2017ம் ஆண்டில் மிகவும் விரும்பப்பட்ட பெண்ணாக ஓவியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே ஓவியா பிரபலமனார். அவரின் முகபாவனங்கள், தைரியமாகவும், வெளிப்படையாகவும் பேசும் தன்மை அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது. சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆதரவு குவிந்தது. டிவிட்டரில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்தார். அவருக்கே அதிகம் பேர் வாக்களித்தனர்.
 
இந்நிலையில், சென்னை டைம்ஸ் பத்திரிக்கை 2017ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட பெண் யார் என்ற கருத்துக்கணிப்பை ரசிகர்களிடையே நடத்தியது. 
 
அதில், ஓவியா முதலிடத்தில் இருக்கிறார். நடிகை நயன்தாரா இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இதன் மூலம், நயன்தாராவை விட ஓவியாவிற்கு அதிக ரசிகர்கள் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. நடிகை அமலாபாலுக்கு 28வது இடம் கிடைத்துள்ளது. அதேபோல், நடிகை ஹன்சிகா கடைசி இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்