நிவேதா பெத்துராஜ் வீடியோவின் மர்மம் இதுதான்.. இதுக்கு தானா இந்த அலப்பற..!

Mahendran

சனி, 1 ஜூன் 2024 (15:54 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னால் நடிகை நிவேதா பெத்துராஜ் காரை 2 காவல்துறை அதிகாரிகள் வழிமறித்தனர் என்றும் அவரது காரை சோதனை செய்ய வேண்டும் என்றும் குறிப்பாக டிக்கியை திறந்து காட்டுங்கள் என்றும் கூறிய வீடியோ இணையத்தில் வைரலானது. 
 
அந்த காவல்துறை அதிகாரிகளுடன் நிவேதா பெத்துராஜ் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தபோது ஒருவர் நிவேதாவை வீடியோ எடுத்ததாகவும் அந்த வீடியோ எடுத்த நபரின் செல்ஃபோனை நிவேதா தட்டிவிட்ட காட்சியும் அந்த வீடியோவில் இருந்ததை எடுத்து அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. 
 
இந்த நிலையில் தற்போது இந்த வீடியோ தமிழ் தெலுங்கில் தயாராகி வரும் ஒரு வெப் தொடரின் படப்பிடிப்பு என்பது தெரிய வந்துள்ளது. ஜி5 தெலுங்கு சேனல் தனது சமூக வலைதளத்தில் இந்த வீடியோவை வெளியிட்டு இந்த வீடியோ படப்பிடிப்பிற்காக எடுத்தது என்பதை கூறியதோடு முழு வீடியோவையும் வெளியிட்டுள்ளது. 
 
இதனை அடுத்து நிவேதா பெத்துராஜை காவல்துறை அதிகாரிகள் விசாரிப்பது முழுக்க முழுக்க படப்பிடிப்பிற்காக என்றும் நிஜத்தில் அல்ல என்பதும் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே இதுபோன்று  பல பிராங்க் வீடியோக்கள் வந்துள்ள நிலையில் அவற்றில் ஒன்றுதான் இந்த வீடியோ என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்