காமெடியனை ஹீரோவாக்கும் பொன்னான இயக்குநர்

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (21:18 IST)
பரோட்டா காமெடி நடிகரை ஹீரோவாக்க நினைத்துள்ளாராம் பொன்னான இயக்குநர்.


 
 
சிவ நடிகருக்கு இரண்டு ஹிட்களைக் கொடுத்தவர் பொன்னான இயக்குநர். தற்போது மூன்றாவது முறையாகவும் சிவ நடிகரை இயக்கி வருகிறார். இந்த மூன்று படங்களிலுமே பரோட்டா காமெடியனும் இருக்கிறார். என்னதான் மூன்றாவது முறையாக இணைந்தாலும், தயாரிப்பு கம்பெனி கொடுக்கும் சம்பளத்தில் இயக்குநருக்கு திருப்தி இல்லையாம்.
 
எனவே, அடுத்த படத்தை இயக்குநரே தயாரிக்க முடிவு செய்துள்ளாராம். அதில், பரோட்டா காமெடியனை ஹீரோவாக்க முடிவு செய்துள்ளாராம். இதற்காகத்தான் உடல் எடையைக் குறைத்து வருகிறாராம் பரோட்டா காமெடியன்.
அடுத்த கட்டுரையில்