தர்பார் ரஜினியின் பெயரும் , முருகதாஸின் குடும்ப செண்ட்டிமெண்ட்டும் !

Webdunia
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (14:23 IST)
தர்பார் படத்தில் ரஜினிக்கு வைக்கப்பட்டுள்ள ஆதித்யா அருணாசலம் என்ற பெயருக்கும் தனது குடும்பத்துக்கும் உள்ள தொடர்பு பற்றி இயக்குனர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
 

ரஜினி படங்களில் அவருக்கு வைக்கப்படும் பெயர்கள் எப்போதும் மாஸாக இளைஞர்களை ஈர்க்கும் வண்ணம் இருக்கும். பெரும்பாலும் அவரது கதாபாத்திரத்தின் பெயரே படத்தின் தலைப்பாகவும் இருக்கும். அலெக்ஸ் பாண்டியன், காளி, முத்து, படையப்பா, பாட்ஷா மற்றும் கபாலி போன்ற பெயர்கள் அதற்கு சில உதாரணங்கள்.

இதையடுத்து இப்போது ரஜினி நடிக்கும் தர்பார் படத்தில் அவரது கதாபாத்திரத்துக்கு வைக்கப்பட்டுள்ள ஆதித்யா அருணாசலம் என்ற பெயர் குறித்து ருசிகரமான தகவலை முருகதாஸ் வெளியிட்டுள்ளார். அதில் இருக்கும் ஆதித்யா என்ற பெயர் முருகதாஸின் மகன் பெயர் எனவும் அருணாசலம் அவருடைய தந்தையின் பெயர் எனவும் சொல்லியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்