தர்பார் அப்டேட்: ஆதித்ய அருணாசலம் ரிப்போர்ட்டிங் ஆன் Jan 9!!
திங்கள், 30 டிசம்பர் 2019 (11:28 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆக உள்ளது என அதிகாரப்பூர்வமாக் அறிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களை கலக்கியது.
இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டுக்குப் பின்னர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது.
ஆம், வரும் ஜனவரி 9 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.