சன் தொலைக்காட்சியில் எடப்பாடியார் விளம்பரம் – கடுப்பான திமுக எம் பி!

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (09:54 IST)
தமிழக அரசியல் களம் தேர்தலால் இப்போது உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது.

தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் பரபரப்பாக தேர்தலுக்கான வேலைகளை செய்ய ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் ஆளும் கட்சி தங்கள் கட்சியின் சாதனைகள் என சொல்லி விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. இதில் அதிர்ச்சி என்னவென்றால் அந்த விளம்பரங்களை திமுக கட்சியைச் சேர்ந்த சன் தொலைக்காட்சியும் வெளியிடுவதுதான்.இதனால் திமுகவினரே இப்போது சன் தொலைக்காட்சி மேல் அதிருப்தியாக உள்ளனர்.

இந்நிலையில் தர்மபுரி தொகுதி எம்பி செந்தில்குமார் இது சம்மந்தமாக டிவிட்டரில் ‘சன் தொலைக்காட்சி மிகப்பெரிய தொழில் நிறுவனமாக இருக்கலாம். ஆனால் கலைஞர் மற்றும் தளப்தியின் தொண்டர்கள் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.  ஒன்று பணம் சம்பாதியுங்கள் அல்லது திமுக வுக்கு விஸ்வாசமாக இருங்கள் எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்