உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த ஒரு ஆண்டு காலமாக பல கோடி மக்களிடம் பரவியுள்ள நிலையில், பல கோடி மக்கள் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் அண்டை நாடான நேபாளமும் கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்ததும் நேபாளத்தின் தேவையை பூர்த்தி செய்ய உதவுவதாக இந்தியா முன்னதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நேபாளத்தின் மக்கள் தொகையில் 20 சதவீதம் மக்களுக்கான தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்ய நேபாளம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பல்வேறு நாடுகளின் 15 தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அந்த தடுப்பூசிகளை இந்தியா மூலமாக விரைவாக பெறவும், அதற்கு பணம் செலுத்தவும் நேபாளம் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.