நய்ரோபிக்காக.. தட்றோம்.. தூக்குறோம்! – வெளியானது மணி ஹெய்ஸ்ட் சீசன் 5!

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (12:36 IST)
பிரபலமான வெப் சிரிஸான மணி ஹெய்ஸ்ட் ஐந்தாவது சீசன் வெளியானதை ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்து கொண்டாடி வருகின்றனர்.

நெட்ப்ளிக்ஸில் வெளியாகி உலகம் முழுவதும் புகழ்பெற்ற இணைய தொடர் மணி ஹெய்ஸ்ட். நான்கு சீசன்கள் வரை வெளிவந்துள்ள இந்த தொடருக்கு இந்தியாவில் அதிகமான ரசிகர்கள் உருவானதை கண்டு பின்னாளில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இந்த தொடர் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

அதை தொடர்ந்து இன்று இந்த தொடரின் இறுதியான 5வது சீசன் வெளியாகியுள்ளது. ஐந்தாவது சீசன் நேரடியாக தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியாகிறது. இந்நிலையில் மணி ஹெய்ஸ்ட் யூட்யூப் பக்கத்தில் ஐந்தாவது சீசன் முதல் எபிசோடின் முதல் 15 நிமிடங்கள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. வெளியாகி 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் 24 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது அந்த வீடியோ. இந்நிலையில் உலகம் முழுவதும் உள்ள மணி ஹெய்ஸ்ட் ரசிகர்கள் மணி ஹெய்ஸ்ட் தொடர்பான ஹேஷ்டேகுகளை இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்