மகளையும் சினிமாவில் அறிமுகப்படுத்தும் மோகன்லால்!

Webdunia
சனி, 18 ஜூலை 2020 (11:03 IST)
மோகன்லால் இயக்கும் புதிய படம் ஒன்றில் அவரது மகள் விஸ்வாமா உதவி இயக்குனராக பணியாற்ற இருக்கிறார்.

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் மோகன்லால். இவர் நடிப்பில் உருவான புலிமுருகன் மற்றும் லூசிபர் ஆகிய படங்கள் வசூலில் சாதனை படைத்து வருகின்றன. இதையடுத்து அவர் இப்போது  ப்ரோஸ்: கார்டியன் ஆப் காமா’ஸ் டிரஸ்சர் என்ற குழந்தைகளுக்கான படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் அவரது மகள் விஸ்வாமா உதவி இயக்குனராக பணியாற்ற இருக்கிறார்.

மோகன் லாலின் மகன் பிரணவ் மலையாள படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது அவர் மகளும் மலையாள சினிமா உலகுக்கு அறிமுகமாக இருக்கிறார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்